விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்
- ஒரு இளைஞனின் முதல் காதலின் கதை!
SEO Services in Chennai - SEO India Kirthee Services
ஆஸ்கர் நாயகனின் இசை, கௌதம் மேனன் இயக்கம் கொஞ்சம் சிம்பு, கொஞ்சம் திரிஷா! - இது ஓன்று போதுமே! தியேட்டர் முழுவதும் ஒரே இளைஞர் கூட்டம் தான்! ஆண்களும் பெண்களுமாய் காதலால் நிரம்பி வழிகிறது!
எனக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது! தனியாக படம் பார்க்க சென்றதை நினைத்து! ஏனென்றால் இது ஜோடியுடன் பார்க்க வேண்டிய படம்.
படம் முழுக்க காதல், காதல், காதல் மட்டும் தான்! படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது! திரிஷா வைப் பார்த்ததும் ஏனோ நமக்கும் காதல் வந்துவிடுகிறது! சிம்பு - அவ்வளவு அழகு! எல்லா வயதினருக்கும் இவரை இந்தப் படத்தில் பிடிக்கும்!
சினிமாவில் சாதிக்க காத்திருக்கும் கார்த்திக், தன் வீட்டு மடியில் குடியிருக்கும் வீட்டு ஓனரின் பெண் ஜெஸ்ஸி யை காதலிக்கிறான்! அவனை விட ஒரு வயது மூத்தவள்! ஆனால் அவளோ, அப்பா, கிறிஸ்டியன் பையன் என்று அனைத்துப் பெண்களைப் போல காரணம் சொல்கிறாள்! விடாமல் அவளைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறான் நம் கார்த்திக்!
SEO Services in Chennai - seo chennai Kirthee Services
SEO Services in Chennai - seo chennai Kirthee Services
ஜெஸ்ஸி யைத் தேடி கேரளா செல்வது, அவளின் வீட்டில் தங்கி இருப்பது, கேரளாவில் இருந்து அவளுடன் சேர்ந்து வரும் பயணம், என அனைத்துமே கவிதை போல இருக்கிறது! முத்தங்களுடன் முடிகிறது அந்தப் பயணம்.
இதுவரை காதலிக்காதவர்கள் கூட காதலிக்க ஆசைப் படுவார்கள், இவர்களின் காதலைப் பார்த்து!
ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு அழகு! குழந்தையின் முதல் மழலைப் பேச்சு போல கேட்பதற்கு அவ்வளவு அருமை! உடைகள் அனைத்தும் அவ்வளவு அழகு! திரிஷா வைப் பார்த்ததும் சேலை கட்ட ஆசை வந்து விடும் இன்றைய சுடிதார் பெண்களுக்கு!
படத்தின் பின்பாதி ஏனோ கொஞ்சம் மெதுவாக செல்வது போல் தோணுகிறது! கார்த்திக் சினிமாவில் ஜெயிக்கிறான், காதலில் ஜெயிக்கிரானா? என்பதை தியேட்டரில் பொய் பாருங்களேன்! முடிந்தால் ஜோடியோடு!
என்றும் அன்புடன்
முத்து செல்வன் கிருஷ்ணன்
http://www.kirthee.com/
SEO Services in Chennai -seo company chennai Kirthee Services
http://www.kirthee.com/
SEO Services in Chennai -seo company chennai Kirthee Services
Labels: vinnaithandi varuvaya cinema review, vinnaithandi varuvaya movie review, vinnaithandi varuvaya review, vtv review